மகாராஷ்டிரத்தில் வேகமாகப் பரவும் கரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை நம்பிக்கையூட்டுகிறது

வியாழக்கிழமை நள்ளிரவு வரை மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ல் இருந்து 135 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் வேகமாகப் பரவும் கரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை நம்பிக்கையூட்டுகிறது

மும்பை: வியாழக்கிழமை நள்ளிரவு வரை மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ல் இருந்து 135 ஆக உயர்ந்துள்ளது.

புணே மற்றும் கோல்ஹாபுரில் தலா ஒருவரும், சாங்லியில் மூவரும், நாக்பூரில் நால்வரும், கோண்ட்யாவில் ஒருவரும் அடங்குவர்.

அதே சமயம், மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டதாக மாநில நல்வாழவுத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பலரின் உடல்நிலை நன்கு தேறி வருகிறது. இதன் மூலம் கரோனாவை குணப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4,200 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மூன்று விஷயங்களைக் கைக்கொண்டுள்ளோம். அதாவது, அடையாளம் காண்பது, சோதனை செய்வது, சிகிச்சை அளிப்பது இதுவே தாரக மந்திரமாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய ரத்தமில்லாமல் மருத்துவத்துறை திணறி வருகிறது. சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் பொதுமக்கள் தாமாக முன் வந்து ரத்த தானம் அளிக்க முன் வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com