
தாயாருடன் பிரதமர் மோடி
லக்னௌ: கரோனா தடுப்பு பணிகளுக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 32 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி வழங்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு பணிகளுக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நிதியுதவி வழங்கியுள்ளார்.
தான் சேகரித்து வைத்திருந்த ரூ.25000- ஐ அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...