
sbi083121
கரோனா தடுப்புப் பணிக்காக பிரதமர் நல நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது.
கரோனா தடுப்புப் பணிக்காக தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் 'பிரதமர் நல நிதிக்கு' தொகை வழங்க பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரதமரின் இந்த கோரிக்கையினை ஏற்று தொழிலபதிபர்கள், நிறுவனங்கள் பல கரோனா தடுப்புப்பணிக்காக நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் தங்கள் இரண்டு நாள் ஊதியத்தை பிரதமர் நல நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) சுமார் 2,56,000 ஊழியர்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு இரண்டு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அனைத்தும் சேர்த்து ரூ.100 கோடி வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...