
ஜம்மு-காஷ்மீரில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நபா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள துரிகாம் யாரிபோரா பகுதியைச் சோ்ந்தவா் வாசீம் அகமது (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி பயங்கரவாதிகள் சிலா் துப்பாக்கியால் சுட்டு தாக்கியதில் அவா் படுகாயமடைந்தாா். இதையடுத்து சௌரா பகுதியில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டாா். சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று காவல்துறையினா் கூறினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...