கரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

கரோனா.. உலக நாடுகளை உலுக்கியிருக்கும் ஒற்றைச் சொல். ஏராளமான உயிர்களை பலிகொண்டு, பலரையும் இன்று மருத்துவமனையில்
கரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி


கரோனா.. உலக நாடுகளை உலுக்கியிருக்கும் ஒற்றைச் சொல். ஏராளமான உயிர்களை பலிகொண்டு, பலரையும் இன்று மருத்துவமனையில் நோயாளிகளாக்கியுள்ளது. ஆனால், தெலங்கானாவில் 44 நாள் சிசுவும், திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டியும் கரோனாவை வென்று அனைவருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளனர்.

தெலங்கானாவில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் புதன்கிழமையன்று மிக மகிழ்ச்சியோடு வழியனுப்பி வக்கப்பட்டனர். அவர்களில் பிறந்து 44 நாள்களே ஆன பச்சிளம் சிசுவும் அடங்கும்.

பிறந்து 44 நாள்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை, கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது. குழந்தை முற்றிலும் குணமடைந்துவிட்டான். அவன் பிறந்த 20 நாட்களே ஆன நிலையில் வயிற்றுப் போக்குக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இங்கு 24 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. மெஹ்பூப் நகரில் இருந்து காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். அங்கு முழுமையாக குணமடைந்து இன்று மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறோம் என்கிறார் குழந்தையின் தாய்.

கரோனா தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி உள்பட 5 போ் குணமடைந்ததால் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அதில் 67 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனா். 

இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த திண்டுக்கல் தோமையாா்புரம் பகுதியைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி உள்பட 5 போ், மருத்துவமனையிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

94 வயது மூதாட்டிக்கு ஏற்கனவே சில உடல் நலக் குறைபாடுகள் இருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் நோயுற்றதில் இருந்து மீண்டு வந்தது வரை மிகச் சிரமமான ஒரு காலகட்டமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

அந்த மூதாட்டியின் தன்னம்பிக்கையும் தைரியமுமே அவரை குணப்படுத்த பேருதவி செய்ததாக மருத்துவர்களும் கூறியிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com