போபால்: கரோனாவில் இருந்து மீண்ட 12 நாள் பச்சிளம் குழந்தை

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை, குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.
போபால்: கரோனாவில் இருந்து மீண்ட 12 நாள் பச்சிளம் குழந்தை


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தை, குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளது.

இந்த குழந்தை பிறந்து 9 நாட்களே ஆன நிலையில் அதற்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பச்சிளம் குழந்தை கரோனாவில் இருந்து மீண்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், எனது மனைவிக்கு ஏப்ரல் 7ம் தேதி சுல்தானியா ஜனனா மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. பிறகு அவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.

இதற்கிடையே, பிரசவத்தின் போது பணியில் இருந்த பெண் மருத்துவப் பணியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாய்க்கும், குழந்தைக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், குழந்தைக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் பூரண குணம் அடைந்து என் குழந்தை வீட்டுக்கு வந்து விட்டது. அதற்கு பிரக்ரிதி (இயற்கை) என்று பெயரிட்டுள்ளோம். பேரிடருக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளது என் குழந்தை என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com