11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வாங்குகிறது மத்திய அரசு

உடனடியாக 11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை வாங்குகிறது மத்திய அரசு

புது தில்லி: உடனடியாக 11.45 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்க இரண்டு இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில், ஹிந்துஸ்தான் லாடெக்ஸ் லிமிடட் லைஃப்கேர் நிறுவனம் மாத்திரைகளை வாங்குகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

தற்போதைய சூழ்நிலையில் மலேரியாவைக் குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஒன்று மட்டும் தான் கரோனா  நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது கரோனா நோயைக் குணப்படுத்தவில்லை என்றாலும், மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் ஒரே மருந்தாகும்.

இது குறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறுகையில், இந்தியாவில் இருக்கும் ஐபிசிஏ  மற்றும் ஸைடஸ் காடிலா மருந்து நிறுவனங்களிடம் சுமார் 11.45 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை உற்பத்தி செய்துக் கொடுக்குமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்குகிறது.

இதையடுத்து, 6.64 கோடி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன, மீதமிருக்கும் மாத்திரைகள் மே 16ம் தேதியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com