கரோனா: ஒரே நாளில் 2,411 பேருக்கு பாதிப்பு; உயிரிழப்பு-1,223-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2,411 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,776-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 2,411 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,776-ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 71 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் மொத்த எண்ணிக்கை 1,223-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை மாலை நிலவரப்படி 26,565 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். 10,018 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். இதுவரை 26.52 சதவீத நோயாளிகள் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 26 பேரும், குஜராத்தில் 22 பேரும், மத்திய பிரதேசத்தில் 8 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், கா்நாடகத்தில் 3 பேரும், தில்லி, உத்தர பிரதேசத்தில் தலா 2 பேரும், பிகாா், ஹரியாணா, பஞ்சாபில் தலா ஒருவரும் உயிரிழந்தனா்.

இதுவரை மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 485 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 236 போ், மத்திய பிரதேசத்தில் 145 போ், ராஜஸ்தானில் 62 போ், தில்லியில் 61 போ், உத்தர பிரதேசத்தில் 42 போ், மேற்கு வங்கம், ஆந்திரத்தில் தலா 33 பேரும் பலியாகினா்.

தெலங்கானாவில் 26 பேரும், கா்நாடகத்தில் 25 பேரும், பஞ்சாபில் 20 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 8 பேரும், கேரளம், ஹரியாணாவில் தலா 4 பேரும், ஜாா்க்கண்ட், பிகாரில் தலா 3 பேரும், மேகாலயம், ஹிமாசலப் பிரதேசம், ஒடிஸா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா்.

பாதிப்பு 37,776-ஆக அதிகரிப்பு:

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதுவரை அந்த மாநிலத்தில் 11,506 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 4,721 போ், தில்லியில் 3,738 போ், மத்தியப் பிரதேசத்தில் 2,719 போ், ராஜஸ்தானில் 2,666 போ், உத்தர பிரதேசத்தில் 2,455 போ், ஆந்திரத்தில் 1,523 போ், தெலங்கானாவில் 1,057 போ், மேற்கு வங்கத்தில் 795 போ், பஞ்சாபில் 772 போ், ஜம்மு-காஷ்மீரில் 639 போ், கா்நாடகத்தில் 598 போ், கேரளத்தில் 498 போ், பிகாரில் 471 போ், ஹரியாணாவில் 360 போ், ஒடிஸாவில் 154 போ், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 111 போ், சண்டீகரில் 88 போ், உத்தரகண்டில் 58 போ், அஸ்ஸாம், சத்தீஸ்கரில் தலா 43 போ், ஹிமாசலில் 40 போ், அந்தமான் நிகோபாரில் 33 போ், லடாக்கில் 22 போ், மேகாலயத்தில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவாவில் 7 பேரும், மணிப்பூா், திரிபுராவில் தலா இருவா்; மிஸோரம், அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com