ஒரு மாதத்துக்குப் பிறகு வயநாட்டில் புதிதாக ஒருவருக்கு நோய்த் தொற்று

​கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 1 மாதமாக கரோனா தொற்று இல்லாத நிலையில், இன்று (சனிக்கிழமை) புதிதாக ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 1 மாதமாக கரோனா தொற்று இல்லாத நிலையில், இன்று (சனிக்கிழமை) புதிதாக ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கேரளத்தில் இன்று புதிதாக இருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒருவர் வயநாட்டைச் சேர்ந்தவர். கடந்த 1 மாதமாக அங்கு யாருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனவே, வயநாடு பச்சை மண்டலத்திலிருந்து நீக்கப்பட்டு ஆரஞ்சு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றொருவர் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்துள்ளது." 

கேரளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) புதிதாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. கடந்த 21 நாள்களாக ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாததால், அவை பச்சை மண்டலங்களுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. கண்ணூர் மற்றும் கோட்டயம் மாவட்டங்கள் தொடர்ந்து சிவப்பு மண்டலங்களில் உள்ளன.

கேரளத்தில் மதுபானக் கடைகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தகங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதிக்கப்படாது என்று பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com