தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பல்கலை., கல்லூரிகளை திறக்கலாம்: மத்திய அரசு

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

News image

ரமேஷ் பொக்ரியால்

Updated On :5 மே 2020, 12:06 pm

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக நாடு முழுவதும் கல்லூரிகளை வரும் செப்டம்பா் மாதம் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.

கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-க்குப் பிறகு என்ன நிலவரம் என்பது தற்போது தெரியாது. ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரித் தோ்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்தது. இந்தநிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தோ்வுகளை நடத்துவது என்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் வரும் செப்டம்பா் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.