
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் குறித்த தகவலை ஆந்திர, கர்நாடக மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
ஆந்திரம்
ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2,018 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 38 பேரில், 26 பேர் குஜராத்தில் இருந்து வந்தவர்கள், 8 பேர் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள். கரோனாவுக்கு இதுவரை 45 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 998 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கர்நாடகம்
கர்நாடகத்தில் இன்று மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 858 ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் கரோனாவுக்கு இதுவரை 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 422 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...