கிராமத்துக்குள் நுழைய தடை: வயல்வெளி, மரத்தடியில் தனிமைப்படுத்திக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்

பல்வேறு மாநிலங்களில் இருந்து பிகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு வந்தும் வீட்டுக்குச் செல்ல முடியாமல் வயல்வெளி மற்றும் மரத்தடியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சொந்த ஊர்களுக்குத் திரும்பினாலும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிராமங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஆனால், கிராமங்களில் இருக்கும் வீடுகளில் எவ்வாறு ஒருவரை தனிமைப்படுத்த முடியும். அதனால், வெளிமாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தங்களுக்கு கரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தால், கிராமங்களுக்குத் திரும்புவோரை ஊருக்குள் அனுமதிக்க மக்கள் தடை விதித்துள்ளனர்.

அதனால், செய்வதறியாது நிற்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு வந்தும் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் வயல்வெளியிலும், மரத்தடியிலும் குடிசைகள் போட்டு 14 நாள்கள் தங்கியிருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குடும்பத்தினர் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அளித்து உதவுகிறார்கள்.

"எங்களால் கிராம மக்களுக்கு கரோனா வந்து விடுமோ என்று பயந்து எங்களை ஊருக்குள் சேர்க்க மறுக்கிறார்கள். வெறும் 14 நாள்கள்தானே, எவ்வளவோ விஷயங்களைக் கடந்து வந்துவிட்டோம். இதைச் சமாளிக்க மாட்டோமா.. இன்னும் 14 நாள்களில் நாங்கள் எங்கள் குடும்பத்தாருடச் சேர்ந்து விடுமோம்" என்று அந்த தற்காலிக குடிசைக்குள் இருந்து மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com