சிக்கிம் தனி நாடா? சர்ச்சையில் சிக்கிய தில்லி அரசு; முதல்வர் கேஜரிவால் விளக்கம்

சிக்கிம் தனி நாடு என்று குறிப்பிட்டிருந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் தனி நாடா? சர்ச்சையில் சிக்கிய தில்லி அரசு; முதல்வர் கேஜரிவால் விளக்கம்

சிக்கிம் தனி நாடு என்று குறிப்பிட்டிருந்த விளம்பரம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் தெரிவித்துள்ளார். 

சிவில் பாதுகாப்புப் படையில் தன்னார்வலர்கள் சேர்வதற்கான அறிவிப்பு ஒன்றை தில்லி அரசு சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளியிட்டிருந்தது. அதில் சிக்கிம் மாநிலத்தை தனி நாடு என்று குறிப்பிட்டிருந்தது. 

இதையறிந்த சிக்கிம் மாநில தலைமைச் செயலாளர், 'சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்று முதல் நம் மிகப்பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஆனால், தில்லி அரசின் இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. விளம்பரம் உடனடியாக திரும்பபெறப்பட வேண்டும். சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும்' என தெரிவித்தார். 

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கும் இதுகுறித்து, தில்லி அரசின் இந்த பிழை கண்டிக்கத்தக்கது என்றும் தில்லி அரசு இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தில்லி முதல்வர் கேஜரிவால், 'சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். இதுபோன்ற பிழைகளை பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்பப்பெறபட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

இது தொடர்பாக, சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com