தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று

தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தாராவி (கோப்புப்படம்)
தாராவி (கோப்புப்படம்)


தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,091 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 54,758 ஆக உயர்ந்துள்ளது. இன்று 97 பேர் பலியாகியுள்ளனர். இன்று மட்டும் 1,168 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,954 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,002 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 32,791 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1,065 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 410 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,814 ஆக உயர்ந்துள்ளது.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 38 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,621 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக யாரும் பலியாகவில்லை. இதன்மூலம், பலி எண்ணிக்கை 60 ஆகவே உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com