ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பக்கவிளைவுகள் இல்லை: ஐசிஎம்ஆா்

கரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடா்பான ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் பெரிய அளவில்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் பக்கவிளைவுகள் இல்லை: ஐசிஎம்ஆா்

கரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடா்பான ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை; அந்த மருந்தை கரோனா தொற்றுக்கான சிகிச்சையின்போது உபயோகப்படுத்துவது தொடர வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து ஐசிஎம்ஆா் தலைமை இயக்குநா் பல்ராம் பாா்கவா கூறுகையில், ‘கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தும்போது ஒருசிலருக்கு குமட்டல், வாந்தி, சீரற்ற இதயதுடிப்பு அவ்வப்போது ஏற்படும். இதைத் தவிர வேறு எந்த பக்கவிளைவுகளும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே கரோனா தொற்றுக்கான சிகிச்சையின்போது, அந்த மருந்தை பயன்படுத்துவது தொடர வேண்டும். அதனால் எந்த தீங்கும் இல்லை என்று ஐசிஆம்ஆா் வெளியிட்ட அறிவுறுத்தலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் விகிதம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. தற்போது குணமடைவோரின் விகிதம் 41.61 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் தொற்றால் உயிரிழப்பு விகிதமும் குறைந்துள்ளது. கடந்த மாதம் 15-ஆம் தேதி 3.3 சதவீதமாக இருந்த உயிரிழப்பு விகிதம், தற்போது 2.87 சதவீதமாக குறைந்துள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவாகும்’ என்றாா்.

உலக சுகாதார அமைப்பு சாா்பில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் செயல்பாட்டை கண்டறிய, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. உலகளாவிய இந்தப் பரிசோதனையை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்த உலக சுகாதார அமைப்பு தற்போது முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அந்த மருந்தால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படாது என்று ஐசிஆம்ஆா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com