கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் இரவு 8.30 மணி நிலவரப்படி, புதிதாக 251 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 8,067 ஆக உயர்ந்துள்ளது.

தெலங்கானா:

தெலங்கானாவில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,908 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 67 ஆக உள்ளது.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 367 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 15,572 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 960 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஹரியாணா:

ஹரியாணாவில் புதிதாக 123 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,504 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 604 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் புதிதாக 115 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்முவிலிருந்து 14 பேர், காஷ்மீரிலிருந்து 101 பேர். மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,036 ஆக உள்ளது. 1,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 344 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,536 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 229 பேர் பலியாகியுள்ளனர். 

ஹிமாச்சலப் பிரதேசம்:

ஹிமாச்சலப் பிரதேசத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. 205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com