'குளிரோ, வெயிலோ கரோனா பரவலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது'

குளிரோ அல்லது வெயிலோ கரோனா தொற்றுப் பரவலில் தனித்து எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஆஸ்டினில் அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
'குளிரோ, வெயிலோ கரோனா பரவலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது'
'குளிரோ, வெயிலோ கரோனா பரவலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது'
Updated on
1 min read


வாஷிங்டன்: குளிரோ அல்லது வெயிலோ கரோனா தொற்றுப் பரவலில் தனித்து எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஆஸ்டினில் அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், வெளியில் வெப்பமான அனல் காற்று வீசுவதோ அல்லது குளிர் காற்று வீசுவதோ கரோனா தொற்றுப் பரவலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, அது முழுக்க முழுக்க மனித நடவடிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலில் காரணிகளாக இருக்கும் வேறெந்த விஷயங்களுக்கும் இறுதியாகவே தட்பவெப்பநிலை இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது நலன் இதழில் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், சுற்றுச்சூழலில் நிலவும் தட்பவெப்ப நிலையை மட்டும் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. குளிர்காலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் எவ்வாறு கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவியது என்பதும் ஆய்வாளர்களால் கவனத்தில் கொள்ளப்பட்டது. அமெரிக்கா முதல், உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் அந்த சமயத்தில் கரோனா தொற்று எவ்வளவு வேகமாகப் பரவியது என்று கணக்கில் கொள்ளப்பட்டது.

இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், கரோனா தொற்றுப் பரவலில் வெப்பநிலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது வெறும் 3 சதவீதமாகவே இருக்கும். அதேவேளையில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை கரோனா தொற்றுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருந்ததற்கான எந்த சாத்தியக் கூறும் தென்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குளிர் காலத்தையோ, மழைக்காலத்தையே எண்ணி கலங்காமல், தனிநபர்கள் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமாகக் கையாள்வதே, கரோனா தொற்றிலிருந்து காக்க உதவும் அரும்பெரும் கருவி என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com