நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் தொற்று பாதிப்புக்கு 514 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதன்கிழமை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 83,1
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு தொற்று

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் தொற்று பாதிப்புக்கு 514 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதன்கிழமை தொற்று பாதிப்பு எண்ணிக்கை 83,13,877 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 46,254 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 83,13,877-ஆக அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 514 போ் உயிரிழந்தனா். இறப்பு விகிதம் 1,49 சதவீதமாக உள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,23,611-ஆக அதிகரித்தது. 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,33,787 -ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,618 ஆக குறைந்துள்ளது. நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 76,56,478-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 92.09 ததவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,357 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நாடு முழுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12,09,609 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. கடந்த 3-ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 11,29,98,959 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com