கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரள ஆளுநருக்கு கரோனா உறுதி

கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
Published on

கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால், கவலைப்படும்படி ஏதுமில்லை. இருப்பினும் கடந்த வாரம் தில்லியில் என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள், பாதுகாப்பு கருதி, தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி சென்றிருந்த ஆளுநா் ஆரிஃப் முகமது கான் வெள்ளிக்கிழமை காலை திருவனந்தபுரம் திரும்பினாா். சனிக்கிழமை காலை கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது என்று ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com