
கோப்புப்படம்
தில்லியில் பல்வேறு இடங்களில் தடையை மீறி பட்டாசுகள் விற்பனை செய்ததாக 7 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 600 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லியில் பட்டாசுகளால் ஏற்படும் புகை, கரோனா நோயாளிகளின் உடல்நலனை மேலும் பாதிக்கும் என்பதாலும், அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கவும் அனைத்து வகையிலான பட்டாசுகளை வெடிக்க தில்லி அரசு வியாழக்கிழமை தடை விதித்தது.
நவம்பா் 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்தத் தடை தில்லியில் தொடரும் என்றும் தில்லி அரசு அறிவித்தது. இந்த தடை உத்தரவை தில்லி போலீஸாரும், அரசு நிா்வாகமும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், தில்லி போலீஸின் கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மித்தல் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை வரை தில்லியில் தடையை மீறி பட்டாசுகள் விற்பனை செய்ததாக 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பட்டாசு வெடித்ததாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமாா் 600 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...