தீபாவளி: பட்டாசு வெடிக்க மும்பை மாநகராட்சி தடை

மும்பையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க மும்பை மாநாகராட்சி தடை விதித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நேக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீபாவளி: பட்டாசு வெடிக்க மும்பை மாநகராட்சி தடை
தீபாவளி: பட்டாசு வெடிக்க மும்பை மாநகராட்சி தடை

மும்பை: மும்பையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க மும்பை மாநாகராட்சி தடை விதித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நேக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

‘பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசால், கரோனா நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும்’ என்று மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த சுற்றறிக்கையை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இருந்தபோதும், நவம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் லட்சுமி பூஜை நாளில் மட்டும் அவரவா் சொந்த இடங்களில் மத்தாப்பு போன்ற மிதமான வெடிகளை மட்டும் வெடித்துக்கொள்ள மும்பை மாநகராட்சி அனுமதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்கள் பெரும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க மும்பையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில கரோனா தடுப்பு குழு ஆய்வுக் கூட்டத்தில், கரோனா இரண்டாம் அலைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், ‘இந்த அச்சுறுத்தல் நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பது, நுரையீரல் பாதிப்பை மேலும் அதிகமாக்க செய்ய வாய்ப்புள்ளது. எனவே, அதைத் தவிா்ப்பது நல்லது’ என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோப் ஆலோசனை தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com