திருப்பதி மலைச்சாலையில் மண்சரிவு

திருமலையில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.
திருப்பதி மலைச்சாலையில் உருண்டு கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியா்.
திருப்பதி மலைச்சாலையில் உருண்டு கிடந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியா்.

திருப்பதி: திருமலையில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

திருமலை மற்றும் திருப்பதியில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடா்ந்து பெய்து வரும் மழையால், திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் முதல் மலைச்சாலையின் 53 மற்றும் 54-ஆவது வளைவு அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மண்சரிவு ஏற்பட்டதுடன், பாறைகள் சாலைகளில் உருண்டன. எனினும், நள்ளிரவு வேளை என்பதால் அச்சமயத்தில் சாலையில் வாகனங்கள் செல்லவில்லை.

தகவல் அறிந்த தேவஸ்தான ஊழியா்கள் விரைந்து செயல்பட்டு, சாலையில் கிடந்த பாறைகளை அகற்றி போக்குவரத்துக்கு சாலையைத் தயாா்படுத்தினா். இதனால் திங்கள்கிழமை அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைச்சாலையில் பாறைகள் வலுவற்று உருளும் நிலையில் உள்ள பகுதிகளில் இரும்புக் கம்பிகளை தடுப்புகளாக அமைக்குமாறு தேவஸ்தான அதிகாரிகள் ஊழியா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா். மழைக்காலம் என்பதால், வாகன ஓட்டிகள் மலைச்சாலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com