
கோப்புப்படம்
தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை 37,200 ஆக அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஐசிஎம்ஆர்-ஐ அறிவுறுத்தியுள்ளது.
இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின்படி, தில்லியில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை எண்ணிக்கையை ஐசிஎம்ஆர் ஒருநாளைக்கு 27,000-இல் இருந்து 37,200 ஆக உயர்த்தியுள்ளது. நவம்பர் 15-ம் தேதி 12,055 ஆர்டி - பிசிஆர் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 19-ம் தேதி 30,735 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன."
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது தில்லியில்தான். தில்லியில் 6,608 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 40,936 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 5,17,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,68,143 பேர் குணமடைந்துள்ளனர். 8,159 பேர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே 13 கோடி கரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை இந்தியா வெள்ளிக்கிழமை எட்டியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...