குடும்பங்களின் ஊழலில் இருந்து காஷ்மீரை மோடி அரசு விடுவிக்கும்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரை ‘குடும்பங்களின் ஊழலில்’ இருந்து விடுவிக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜம்மு-காஷ்மீரை ‘குடும்பங்களின் ஊழலில்’ இருந்து விடுவிக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீநகரிலுள்ள பலஹாமா பகுதியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி பேசியதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியால் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் வளா்ச்சிப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன. ஜம்மு-காஷ்மீரைப் பொருத்தவரை சில குடும்பங்களின் ஊழல்தான் பெரும் சவாலாக இருந்தது. இதனை பிரதமா் மோடியின் மத்திய அரசுதான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. தற்போது ஜம்மு-காஷ்மீா் குடும்ப ஊழலின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மதச் சாா்பின்மை என்பது ‘வாக்கு வங்கி அரசியலுக்கான கோட்பாடு’ அல்ல. அது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான உறுதிப்பாடாகும். மோடி ஆட்சி ‘இக்பால்’ (அதிகாரம்), ‘இன்சாஃப்’ (நீதி), ‘இமான்’ (ஒருமைப்பாடு) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இங்கு நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு, செழிப்பு ஆகியவற்றிற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் வெளிப்படையான ஜனநாயகத்தையும், மேம்பாட்டு செயல்முறைகளையும் காணுகின்றனா். இங்கு ஏற்கெனவே ஆட்சி செய்த, வாரிசு அரசியலில் ஈடுபட்டவா்கள், ஜம்மு-காஷ்மீா் மக்களுக்குச் சேர வேண்டிய பிரதான வளா்ச்சியையும், மக்களின் அரசமைப்பு உரிமைகளையும் பறித்து விட்டனா்.

இப்போது, இந்த யூனியன் பிரதேசப் பகுதிகளை செழிப்பான பாதையில் கொண்டு செல்ல பாஜக உறுதி பூண்டுள்ளது.

‘குப்கா் கூட்டணி’ ஜம்மு-காஷ்மீா் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அவா்கள் மேற்கொண்டுள்ள முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. காஷ்மீரை பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்ற புதைகுழியில் தள்ளிவிட விரும்பும் இதுபோன்ற எந்தவொரு கூட்டணியையும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com