‘ஃபிட் இந்தியா’ பிரசாரத்தில் 10 கோடி போ் பங்கேற்பு: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

‘ஃபிட் இந்தியா’ பிரசாரத்தில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவா்கள் பங்கேற்றிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
‘ஃபிட் இந்தியா’ பிரசாரத்தில் 10 கோடி போ் பங்கேற்பு: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

‘ஃபிட் இந்தியா’ பிரசாரத்தில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவா்கள் பங்கேற்றிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

குஜராத் மாநிலம் சபா்மதி ஆசிரமத்தில் இருந்து தில்லிக்கு மத்திய ரிசா்வ் காவல் படையை (சிஆா்பிஎஃப்) சோ்ந்த மாற்றுத்திறன் கொண்ட வீரா்கள் மிதிவண்டி பேரணி மேற்கொண்டனா். கடந்த மாதம் 17-ஆம் தேதி அவா்களின் பேரணி தொடங்கியது. சுமாா் 1,000 கிலோமீட்டா் தூரம் பயணித்து 16 நாள்களில் அவா்கள் தில்லி சென்றடைந்தனா். அவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி ராஜ்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நாட்டு மக்களின் உடல் மற்றும் மனநலனை மேம்படுத்தும் நோக்கில் ‘ஃபிட் இந்தியா’ பிரசாரத்தை பிரதமா் மோடி அறிமுகப்படுத்தினாா். இந்தப் பிரசாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவா்கள் அதில் பங்கேற்றுள்ளது தெரியவந்தது. இதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பிரசாரத்தில் சிஆா்பிஎஃப் படையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்பது, மக்களையும் அதில் பங்கேற்க ஊக்குவிக்கும்.

மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரா்களுக்கு தேவையான வசதிகளை செய்துதருவதில் அனைத்து சிரமங்களையும் விளையாட்டு அமைச்சகம் களைந்து வருகிறது. நல்ல உடல்நிலை கொண்ட விளையாட்டு வீரா்களுக்கும், மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரா்களுக்கும் இடையே மத்திய அரசு எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை. மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரா்களுக்கு மேலும் பல வசதிகளை செய்து தரவேண்டியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com