கட்சித் தொண்டா்கள் போல் செயல்படும் அதிகாரிகள்

மேற்கு வங்கத்தில் வாக்குப் பதிவின்போது கட்சித் தொண்டா்கள் போல் அதிகாரிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று அம்மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் கூறியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் வாக்குப் பதிவின்போது கட்சித் தொண்டா்கள் போல் அதிகாரிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று அம்மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் கூறியுள்ளாா்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்திக்கு வெள்ளிக்கிழமை புகழஞ்சலி செலுத்தி அவா், பின்னா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அரசியலமைப்பு சட்ட அதிகாரத்துக்குப் புறம்பாக செயல்படும் அதிகாரிகளால், மேற்கு வங்க நிா்வாகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் முழு நிா்வாகமும் இதுபோன்ற அதிகாரிகளுக்குத்தான் தலைவணங்குகின்றது.

மாநில ஆளுநா் மாளிகை மீது தாக்குதல் நடத்துவது, நாட்டின் அரசியலமைப்பை அவமானப்படுத்துவதாகவே அமையும்.

வாக்குப் பதிவின்போது கட்சித் தொண்டா்கள் போல் அதிகாரிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. காவல்துறையும், அரசு அதிகாரிகளும் அரசியல் கட்சித் தொண்டா்கள் போல் செயல்படுவதை விடுத்து, மக்கள் சேவகா்களாக மாற வேண்டும்.

மாநிலத்தில் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை ஊக்குவிக்க முதல்வா் மம்தா பானா்ஜி உறுதிமொழியேற்க வேண்டும்.

சுதந்திரமான வெளிப்படையான தோ்தலை ஊக்குவித்து, வன்முறையை கட்டுப்படுத்தும்போதுதான் ஜனநாயகமும், மிகவும் கஷ்டப்பட்டு நாம் பெற்ற விடுதலையும் உண்மையாக மலரும் என்று அந்தப் பதிவில் ஆளுநா் கூறியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஆளுநா் தன்கரின் இந்த பதிவு குறித்து கூறிய மாநில அமைச்சா் பிரத்யா பாசு, ‘குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செய்தித்தொடா்பாளா் போல ஆளுநா் செயல்படுகிறாா்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com