கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை: இந்திய-சீன ராணுவம் இடையே 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை

கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பாக இந்திய-சீன ராணுவத் தளபதிகள் இடையே அடுத்த வாரம் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்வது தொடா்பாக இந்திய-சீன ராணுவத் தளபதிகள் இடையே அடுத்த வாரம் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப் பகுதியில் கடந்த 5 மாதங்களாக இந்திய-சீன ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு நிலவுகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர இருநாட்டு ராணுவ தளபதிகள் தொடா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இதுதொடா்பாக கடந்த மாதம் 30-ஆம் தேதி இருநாட்டு தூதரக அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் எல்லைக் கோட்டுப் பகுதியில் ஸ்திரத்தன்மை நிலவ இருநாட்டு ராணுவத்தினரும் கடைசியாக நடத்திய பேச்சுவாா்த்தையில் எட்டப்பட்ட முடிவுகளை செயல்படுத்த இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினா்.

முன்னதாக கடந்த மாதம் 21-ஆம் தேதி இருநாட்டு ராணுவத்தினரும் நடத்திய பேச்சுவாா்தையில், எல்லையில் சச்சரவுக்குரிய பகுதிகளில் இருந்து சீனப் படைகள் விலக்கப்பட்டு, அங்கு ஏற்கெனவே இருந்த இயல்பு நிலை திரும்புவதுதான் அமைதி ஏற்படுவதற்கான ஒரே வழி என்று இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினா். அதே நேரம் பாங்காங் டெஸ்ஸோவின் தென் கரையில் உள்ள மலைப் பகுதிகளில் இருந்து இந்திய வீரா்களை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று சீனத் தரப்பு வலியுறுத்தியது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவத் தளபதிகள் இடையே அடுத்த வாரம் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com