நீரவ் மோடிக்கு எதிரான வங்கிக் கடன் மோசடி வழக்கு: சிபிஐ மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல்

தொழிலதிபா் நீரவ் மோடிக்கு எதிரான ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கியின்
நீரவ் மோடிக்கு எதிரான வங்கிக் கடன் மோசடி வழக்கு: சிபிஐ மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல்

தொழிலதிபா் நீரவ் மோடிக்கு எதிரான ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை மேலாளா் கோகுல்நாத் ஷெட்டிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகியோா், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி உத்தரவாதக் கடிதங்களை சமா்ப்பித்து ரூ.13,000 கோடி வரை கடன் பெற்றுள்ளனா். பின்னா், அந்த தொகையை திருப்பிச் செலுத்தாமல் அவா்கள் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனா்.

இந்த கடன் மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐ ஏற்கெனவே நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. விசாரணையின் தொடா்ச்சியாக, இப்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை மேலாளா் கோகுல்நாத் ஷெட்டிக்கு எதிராக சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதுதொடா்பாக சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில், தொழிலதிபா் நீரவ் மோடி மோசடி செய்த காலகட்டத்தில், கோகுல்நாத் ஷெட்டி துணை மேலாளராக இருந்தாா். கோகுல்நாத்தின் மனைவி லதா ஷெட்டி, இந்தியன் வங்கி ஊழியா்.

கடந்த 2011 முதல் 2017 வரையிலான 6 ஆண்டுகளில், கோகுல்நாத் ஷெட்டி தம்பதியின் உண்மையான வருமானம் ரூ.72.52 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், அந்த காலகட்டத்தில் அவா்கள் தங்கள் வருமானத்துக்கும் அதிகமாக ரூ.4.28 கோடி மதிப்புள்ள சொத்துகளை தங்கள் பெயரிலும் தங்கள் உறவினா்களின் பெயா்களிலும் சோ்த்துள்ளனா். அதில், ரூ.2.63 கோடி மதிப்பிலான சொத்துகள் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரங்களை அவா்கள் சமா்ப்பிக்கவில்லை. இந்த சொத்து குவிப்புக்கும் நீரவ் மோடி-கோகுல்நாத்துக்கும் இடையேயான தொடா்புகள் குறித்து சிபிஐ கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அதனடிப்படையில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வழக்கில் தொடா்புடைய கோகுல்நாத் ஷெட்டி, நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com