சிபிஐ முன்னாள் இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை

​சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வானி குமார் சிம்லாவிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

அவரது உடல் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டதாக சிம்லா காவல் துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.

அஸ்வானி குமார் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசு மற்றும் ஹிமாச்சலப் பிரதேச அரசுகளுக்காக பணியாற்றியுள்ளார். 1973-இல் ஐபிஎஸ்-இல் இணைந்த அவர் 2006 ஆகஸ்டில் ஹிமாச்சலப் பிரதேச காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அவர் நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com