

பிகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்காளர்களை பாஜக அரசு அறிவித்துள்ளது.
பிகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனால் இத்தொகுதிகளில் முதற்கட்ட வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து 2-வது கட்டமாக நவம்பர் 3-ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 46 வேட்பாளர்களை தற்போது பாஜக அரசு அறிவித்துள்ளது.
இதில் பெட்டியா (Bettiah) தொகுதியில் ரேணுதேவி போட்டியிடுகிறார்; பைகுந்த்பூர் தொகுதியில் மிதிலேஷ் திவாரி, தனபூர் தொகுதியில் ஆஷா சின்ஹா போட்டியிடவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.