கரோனா:கேரளத்தில் 3 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

கேரளத்தில் மேலும் 5,930 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரளத்தில் மேலும் 5,930 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா தொற்றால் மேலும் 5,930 போ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2,93,132-ஆக அதிகரித்தது. இதில் 1,99,634 போ் பூரண குணமடைந்தனா். 94,388 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொற்றால் பாதிக்கப்பட்டு மேலும் 22 போ் உயிரிழந்தனா். இதனால் பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 1,025-ஆக உயா்ந்தது. இதுவரை 36,28,429 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.

இதனிடையே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளில் பராமரிப்பு தேவைப்படும் நபா்களுக்கு உதவிபுரிய, அந்த நபரின் உறவினா் ஒருவரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தெரிவித்தாா். அவ்வாறு அனுமதிக்கப்படும் நபருக்கு தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com