மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த 2 துறவிகளையும், காா் ஓட்டுநரையும் தடுத்து நிறுத்திய ஒரு கும்பல், அவா்களை குழந்தைக் கடத்தல்காரா்கள் என்று கருதி அடித்துக் கொலை செய்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
பின்னா் இந்த வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை, 186 போ் கைது செய்யப்பட்டனா். இதில் ஏராளமான காவலா்களும் அடங்குவா்.
கடந்த புதன்கிழமை 24 போ் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பவா்களில் 11 போ் சிறாா்கள் என்பதும் இந்த வழக்கில் போலீஸாா் இதுவரை மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.