நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை: ஹர்ஷவர்தன்

வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுவதால், நாட்டில் கரோனா கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என்று மத்திய சுகாதாரத்துறை அம
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)



புதுதில்லி: வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுவதால், நாட்டில் கரோனா கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகளுடனான கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான மறுஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஹர்ஷவர்தன், "கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நாட்டில் அடுத்த மூன்று மாதங்கள் காரோனாவின் நிலைமையை கட்டுப்படுத்துவதில் முக்கியமானவையாக இருக்கும். வரவிருக்கும் திருவிழா மற்றும் குளிர்காலங்களில் கரோனாவை எசிர்த்து பேராடுவதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால், நாம் கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த இடத்தில் இருப்போம். "

"உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு பெரிய மாநிலத்திற்கு, கரோனா நோய்த்தொற்று பரவை தடுப்பதற்கு குறிப்பாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் கை கழுவது, சூடான பானங்களை அருந்துதல், ஆவி பிடித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை பெரிய அளவிற்கு  பயனுள்ள எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும்" என்று கூறினார்.

தற்போது வரை உத்தரப் பிரதேசத்தில் கரோனா இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக ஆக உள்ளது, இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் மீட்பு விகிதம் தேசிய மீட்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

நாடு கடந்த மூன்று மாதங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

"கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் குறைவாகவும், தொற்று இரட்டிப்பு விகிதம் 97.2 நாள்களாக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து எச்சரித்த வண்ணமாக உள்ளனர். 

ஒரே ஒரு ஆய்வகத்தைக் கொண்டு தொடங்கிய தொற்று பரிசோதனை பயணம், இப்போது நாட்டில் கிட்டத்தட்ட 2000 ஆய்வகங்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் நீண்ட தூரம் வந்துள்ளோம் "நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த கரோனா மாதிரி சோதனைகளின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது. இது நாம் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதற்கான சாதகமான அறிகுறியாகும்" என்று ஹர்ஷவர்தன் கூறினார். 

வரக்கூடிய பண்டிகை காலமும், குளிர்காலமும் தொற்று பரவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ள காலமாக பார்க்கப்படுவதால், நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com