தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா


ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவியில் புதிதாக 11 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,508 ஆக உயர்ந்துள்ளது. 2,500-இல் இருந்து 3,000 பாதிப்புகளுக்கு 72 நாள்கள் எடுத்துக்கொண்ட நிலையில், 3,000-இல் இருந்து 3,500 பாதிப்புகளுக்கு 39 நாள்கள் எடுத்துக்கொண்டுள்ளது.

மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3,057 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதன்மூலம், 143 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தாராவியில் 2.5 சதுர கிலோ மீட்டர்களில் 6.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதனால், ஒருகட்டத்தில் கரோனாவுக்கான ஹாட் ஸ்பாட் பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது அங்கு கரோனா பாதிப்பு பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com