'முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாகக் கருதலாம்': சத்யேந்தர் ஜெயின்

முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாக தில்லி மக்கள் கருத வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
'முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாகக் கருதலாம்': சத்யேந்தர் ஜெயின்
'முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாகக் கருதலாம்': சத்யேந்தர் ஜெயின்

புது தில்லி: முகக்கவசத்தையே கரோனா தடுப்பூசியாக தில்லி மக்கள் கருத வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யேந்தர் ஜெயின், கரோனா நோயாளிகளை விரைவாகக் கண்டறிதல், பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கையால் தில்லியில் தற்போது கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 35 சதவீத படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. தீவிர நடவடிக்கையால் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தையே தடுப்பூசியாகக் கருத வேண்டும். நீங்கள் முகக்கவசம் அணிந்தால், உங்களை காற்று மாசில் இருந்தும், கரோனா தொற்றில் இருந்தும் அது காக்கும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமுடக்கத்தை அமல்படுத்தினாலும் கரோனா பாதிப்பு குறையாது. ஆனால், 100 சதவீத மக்களும் முகக்கவசம் அணிந்தால்தான் கரோனா பாதிப்பு குறையும். பொதுமுடக்கத்துக்கு இணையாக முகக்கவசம் நல்ல பலனை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com