கரோனா பாதித்தவர்களில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில்

நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40 லட்சத்தை நெருங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 30 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதித்தவர்களில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில்
கரோனா பாதித்தவர்களில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில்


புது தில்லி: நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 40 லட்சத்தை நெருங்குகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 30 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 2% பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 30 லட்சமாக உள்ளது. 

அதேவேளையில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 0.5%க்கும் குறைவானவர்களே செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை பெறுகிறார்கள். மொத்த கரோனா நோயாளிகளில் 16,545 பேர் ( 2%) மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 28,437 பேர் (3.5%) ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகிறார்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com