
கோப்புப் படம்
ஜம்மு காஷ்மீா், ரஜோரி மாவட்டத்தில் உள்ள மைரா செளக்யான் கிராமத்தில் சனிக்கிழமை இரவு குறைந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இது குறித்து காவல் துறையினா் கூறுகையில், ‘காவல் துறை அதிகாரியின் சகோதரா் வீட்டில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அங்கிருந்த மூன்று காா்களும், வீட்டின் ஜன்னல்களும் சேதமடைந்தன. குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தனா்.