
கேரள மாநிலம் ஆற்றிங்கல் பகுதியில் கன்டெய்னா் லாரியில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 20 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கலால் வரித் துறை ஆய்வாளா் அனில் குமாா் கூறுகையில், ‘மைசூரில் உள்ள கேரளத்தைச் சோ்ந்த சிலா் கன்டெய்னா் லாரியில் கேரளத்துக்கு அதிக அளவில் கஞ்சா கடத்த உள்ளதாக உறுதியான தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கன்டெய்னரில் பிற சரக்குப் பெட்டிகளுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 20 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் எடை 500 கிலோவுக்கு அதிகமாக இருக்கும். இதுதொடா்பாக பஞ்சாப், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த இருவரை கைது செய்துள்ளோம். இந்த கஞ்சா எவ்வாறு விநியோகம் செய்யப்பட இருந்தது என்ற தகவலும் கிடைத்துள்ளது’ என்றாா்.
இந்த கஞ்சா கடத்தலுக்கு பின்னணியில் யாா் உள்ளனா் என்று கலால் வரித் துறை விரைவில் கண்டுபிடிக்கும் என்று மாநில கலால் வரித் துறை அமைச்சா் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.