
உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
லகிம்பூர் கேரி: உத்தரப்பிரதேசத்தில் நிலத்தகராறில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டம் நிகாசன் தொகுதியில் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் சுயேட்சையாகவும், 1993-ஆம் ஆண்டு சமாஜவாதி கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிர்வேந்திர குமார் முன்னா. அவருக்கு சொந்தமான நிலம் ஒன்று லகிம்பூர் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது.இந்த நிலத்திற்கு வேறு சிலரும் உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஞாயிறன்று நிர்வேந்திர குமாரும் அவரது மகன் சஞ்சீவ் குமாரும் குறிப்பிட்ட நிலத்தில் இருந்துபோது, மற்றொரு தரப்பினர் அங்கே ஆயுதங்களுடன் வந்து நிலத்தினை ஆக்கிரமிக்க முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தை மற்றும் மகன் இருவரையும் கம்புகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிர்வேந்திர குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.சஞ்சீவ் கடுமையான காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் அங்கு விரைந்துள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.