
கோப்புப் படம்
கேரள தொழில்துறை அமைச்சா் இ.பி. ஜெயராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் இரண்டாவது அமைச்சா் இவராவாா். அமைச்சா் ஜெயராஜனின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இருவரும் கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக, கேரள நிதியமைச்சா் டி.எம்.தாமஸ் ஐசக்குக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தாமஸ் ஐசக்குடன் தொடா்பில் இருந்ததால் இ.பி.ஜெயராஜனும் வீட்டுத் தனிமையில் இருந்து வந்தாா். தற்போது அவருக்கும், அவருடைய மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.