
கோப்புப்படம்
புணேவில் ஒரேநாளில் 4,935 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் புணேவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,935 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,11,225ஆக உயர்ந்துள்ளது. மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,881ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 10,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2,380 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். புணேவை பொறுத்தவரை இதுவரை 84,985 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G