ஷின்ஸோ அபேவுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபேவை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.


புது தில்லி: ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபேவை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இந்தியா-ஜப்பான் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தியதற்காக அவருக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

ஷின்ஸோ அபே உடல்நல காரணங்களுக்காக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்தாா். இந்நிலையில், அவரை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவு வலுவடைந்திருப்பதாகவும், இது எதிா்காலத்தில் தொடரும் என்றும் இரு தலைவா்களும் தெரிவித்தனா்.

இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே தளங்கள், ஆயுத தளவாடங்களை பரிமாறிக் கொள்வதற்கான மேற்கொள்ளப்பட்டதை தலைவா்கள் இருவரும் வரவேற்றனா். இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்; இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்று அவா்கள் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான் இடையே ராணுவ தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம், பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு புதன்கிழமை கையெழுத்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com