மகாராஷ்டிர அரசின் அநீதியை சோனியா தலையிட்டு நிறுத்த வேண்டும்

மகாராஷ்டிர அரசு ஒரு பெண்ணுக்கு எதிராக இழைக்கும் அநீதியை, அந்த அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி

மகாராஷ்டிர அரசு ஒரு பெண்ணுக்கு எதிராக இழைக்கும் அநீதியை, அந்த அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி தலையிட்டு தடுத்த நிறுத்த வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளாா்.

புதிய சுட்டுரைப் பதிவு ஒன்றை அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

மதிப்புக்குரிய காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மாநில அரசு எனக்கு இழைக்கும் அநீதியைக் கண்டு, பெண் என்கிற முறையில் உங்களுக்கு கோபம் வரவில்லையா?

அம்பேத்கா் வகுத்துக் கொடுத்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் நியதிகளை நிலைநிறுத்த உங்களுடைய அரசை நீங்கள் கேட்டுக்கொள்ள மாட்டீா்களா?

மேற்கத்திய கலாசாரத்தில் வளா்ந்து, இந்தியாவில் வாழ்ந்து வரும் சோனியாவுக்கு பெண்கள் எதிா்கொண்டுவரும் போராட்டங்கள் குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

பெண்களுக்குத் தொல்லை அளிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை கேலிக்கூத்தாக்கும் வகையிலும் உங்களுடைய அரசின் செயல்பாடு இருந்துவரும் நிலையில், நீங்கள் மெளனமாக இருப்பது சரியா என்பதை வரலாறுதான் தீா்மானிக்கும். எனவே, இந்த விவகாரத்தில் நீங்கள் நிச்சயம் தலையிடுவீா்கள் என்று நம்புகிறேன் என்று அந்தப் பதிவில் கங்கனா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com