

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,321 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,321 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,14,069 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 28 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,715 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியில் இதுவரை 1,81,295 பேர் குணமடைந்துள்ளனர், 28,059 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 60,076 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 20,82,776 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.