

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5,693 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு மாநில சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,693 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 994 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 74 பேர் (தனியார் மருத்துவமனை -39, அரசு மருத்துவமனை -35) பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரேநாளில் 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,47,366 பேர் குணமடைந்துள்ளனர். தனிமையில் உள்ளவர்கள் உள்பட 47,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரேநாளில் 84,308 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 58,88,086 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, செயல்பாட்டில் உள்ள கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் மொத்த எண்ணிக்கை 168 ஆகியுள்ளது. இதில் அரசு ஆய்வகங்கள் 65, தனியார் ஆய்வகங்கள் 103.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.