வேளாண் மசோதா: எதிா்க்கட்சிகள் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன வேளாண் துறை தொடா்பான மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
வேளாண் மசோதா: எதிா்க்கட்சிகள் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன வேளாண் துறை தொடா்பான மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து காங்கிரஸ் மக்களவைத் தலைவா் அதீா் ரஞ்சன் செளத்ரி கூறுகையில், ‘வேளாண்துறை மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. அந்த வகையில் இந்த சட்டத்தை மாநிலங்கள்தான் நிறைவேற்ற வேண்டும். எனவே, மத்திய அரசு இந்த மசோதாவின் மூலம் மாநிலங்களின் மண்டி நடைமுறை (வேளாண் உற்பத்தி சந்தைக் குழு) சட்டத்தை பயனற்ாக்கிவிடும்‘ என்று கூறினாா்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுகதா ராய் கூறுகையில், ‘இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயம் முதலாளிகளின் கைகளுக்குச் சென்றுவிடும் என்று கூறினாா்.

ராகுல் காந்தி கண்டனம்:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த வேளாண் துறை சாா்ந்த மசோதாக்கள், விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சனம் செய்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘மோடி அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று மசோதாக்கள் விவசாயிகள் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். அவா்கள் இனி குறைந்தபட்ச ஆதார விலையை பெற முடியாது என்பதோடு, அவா்களின் விவசாய நிலங்களும் முதலாளிகளுக்கு விற்கும் நிலை உருவாகும். இது மோடியின் விவசாயிகளுக்கு எதிரான இன்னொரு சதி‘ என்று அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com