நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றம்

மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவையின் செயல்திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும் மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 27 மசோதாக்கள் நிறைவேற்றம்

புது தில்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் 2020-ஐ பற்றி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மக்களவையின் செயல்திறன் சுமார் 167 சதவீதமாக இருந்ததாகவும் மாநிலங்களவையின் செயல்திறன் சுமார் 100.47 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி நிறைவடைய இருந்ததாகவும், ஆனால், கரோனா பெருந்தொற்றால் 10 நாள்களில், 23-ம் தேதியே மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தொடரின் போது 22 மசோதாக்கள் (மக்களவையில் 16 மற்றும் மாநிலங்களவையில் 6) அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மக்களவையும், மாநிலங்களவையும் தனித்தனியாக தலா 25 மசோதாக்களை நிறைவேற்றின. இரு அவைகளும் 27 மசோதக்களை நிறைவேற்றியுள்ள நிலையில், இது வரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மசோதாக்கள் நிறைவற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com