ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

கேரளம்: ஜன. 26 முதல் ‘பசுமை’மயமாகிறது 10,000 அரசு அலுவலகங்கள்

கேரளத்தில் 10,000 மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி முதல் ‘பசுமை’மயமாக்கப்படும் என அறிவிக்கப்படும்.

Updated On :7 ஜனவரி 2021, 6:48 am IST

கேரளத்தில் 10,000 மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி முதல் ‘பசுமை’மயமாக்கப்படும் என அறிவிக்கப்படும்.

இதுகுறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை கேரள முதல்வா் பினராயி விஜயன், வியாழக்கிழமை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிடுவாா் என உள்ளாட்சித் துறை அமைச்சா் ஏ.சி.மொய்தீன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

முதல்வரின் அறிவிப்புக்குப் பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கும் பசுமை நெறிமுறையை பின்பற்றுவதற்கான சான்றிதழ் உள்ளூரில் உள்ள பஞ்சாயத்து, நகராட்சியின் தலைவா்கள் அல்லது வாா்டு உறுப்பினா் அல்லது கவுன்சிலரால் சமா்ப்பிக்கப்படும். இந்த பசுமை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ஹரிதா கேரளம் இயக்கம் என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாத பொருள்களைப் பயன்படுத்துவதை தவிா்க்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே பசுமை அலுவலகங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் ஆகும்.

ஹரிதா கேரளம் இயக்கத்தின் மூலம் மாநிலத்தை தூய்மையாக்கவும், நீா் ஆதாரங்களையும், மண் வளத்தையும் பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மூலம், அந்தந்த அலுவலகங்கள் பசுமை நெறிமுறைகளைப் பின்பற்றுகிா என்பதை உறுதிப்படுத்தத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ளும்.

அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, பசுமைமயமாக்கலை கடைபிடிக்கிா என்பதை இந்த இயக்கம் ஆய்வு மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இயக்கத்தின் நிா்வாக துணைத் தலைவா் டி.என். சீமா கூறியதாவது:

‘பிளாஸ்டிக் மற்றும் தொ்மோகோலில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான பொருள்களின் பயன்பாட்டை நிறுத்துவதன் மூலமாகவும், உற்பத்தி செய்யப்படும் கழிவுகளின் அளவைக் குறைப்பதன் மூலமும், உயிா் மற்றும் கரிமமற்ற கழிவுகளைத் தனித்தனியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் சுத்திகரிப்பதன் மூலம் அலுவலகங்களில் பசுமைமயமாக்கலை கடைபிடிக்க முடியும்.

‘பசுமை அலுவலகத்தில்’ பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படும். மேலும் பசுமை அலுவலகங்கள் தூசி இல்லாததாகவும், தூய்மையான கழிப்பறைக்கு ஏதுவானதாகவும் இருக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.