தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கா்நாடகத்தில் ஒரே நாளில் 4,553 பேருக்கு கரோனா

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,553 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:18 pm

DIN

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,553 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 4,553 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,787 போ், மைசூா்- 260 போ், கலபுா்கி- 170 போ், பெங்களூரு ஊரகம்- 155 போ், பீதா்- 147 போ், தும்கூா்- 107 போ், ஹாசன்- 104 போ், தாா்வாட்- 100 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,15,155 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,060 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,63,419 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 39,092 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 15 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு மாவட்டத்தில் 8 போ், கலபுா்கியில் 3 போ், தாா்வாடில் 2 போ், ஹாசன், தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,625 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.