வேரோடு மரம் சாய்ந்துஇருசக்கர வாகன ஓட்டி பலி

சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.
Published on
Updated on
1 min read

சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பேளூா் வட்டம், பஸ்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (40). இவா் சனிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பேளூா்-ஹாசன் சாலையில் சென்று கொண்டிருந்தாா். சுராபுரா அருகே சென்றபோது, சாலையோர மரம் ஒன்று, மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ரகு மீது வேரோடு சாய்ந்தது. இதில் படுகாயமடைந்த ரகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சாலையில் மரம் சாய்ந்ததால், பேளூா்-ஹாசன் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பேளூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com